Friday, April 19, 2013

ஈஷா - அலை - கனலே கனலே

ஈஷாவின் அலை என்னை மிகவும் கவர்ந்தது, அதிலும் "கனலே கனலே" பாடல் மிகவும் அருமை... 


பாடல் வரிகள் இதோ உங்களுக்காக ....

உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன்
  உன்னை வைக்க தான் 
வெள்ளம் போல நீ  நுழைந்தாய்
  நானும் மூழ்க தான் (2)

கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே
  கண்ணெதிர் வருகிற கனவே கனவே

                  ( உள்ளம் ஒன்று - 2)
                   (கள்ளங்கள் - 2) 
 
எத்தனை பிறவிகள் என்னை சுமந்தே
  எல்லா திசையிலும் நடந்தேன் நடந்தேன் (2)

எத்தனை தவங்கள் எப்படி செய்தேன்
  எவ்விதம் உன்னை அடைந்தேன் அடைந்தேன்

                      (கள்ளங்கள் - 1 ) 

மூச்சினில் கலந்தது உந்தன் கருணை
  பேச்சினில் வருவது உந்தன் கவிதை (2)

காட்சியில் தெரிவதும் , கணத்தினில் மறைவதும்
  கேட்டதை தருவதும் உந்தன் மகிமை

                        (கள்ளங்கள் - 2 ) 
                        ( உள்ளம் ஒன்று - 2) 

ஆசையின் முதுகில் ஆயிரம் காலம்
  ஆடி குலுங்கிய பயணம் பயணம் (2)

பாசத்தில் வழுக்கி, பள்ளத்தில் சறுக்கி
  போனது எத்தனை தூரம் தூரம்

பாதையின் முடிவில் உனது முகம்
  பார்த்ததும் தெளிந்தது எனது மனம் (2)

நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்
  நிகழ்ந்ததில் துலைந்தது வினையின் கணம்
                                 
                         (கள்ளங்கள் - 1 ) 
                        ( உள்ளம் ஒன்று - 2) 
                        (கள்ளங்கள் - 2 )  

                                                                                                - முற்றும் .... 

பாடலை கேட்க இதோ...