பிரதமருக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய தொகை ஒரு அமைச்சரால் ஊழல் செய்ய முடியுமா?அப்படி செய்ய முடியுமென்றால் பிரதமர் எப்படி தன்னுடைய ஆட்சியை சிறந்த நிர்வாக திறன் மிகுந்த ஆட்சி என்று பறைசாற்றிகொள்கிறார்??
இந்த கூத்துகளெல்லாம் ஒரு புறம் நடக்க, தன் பக்க நியாயத்தை புலம்பலாக சொன்ன முன்னாள் மத்திய அமைச்சர் தூங்கி எழுந்தவுடன் பிரதமரை தான் குற்றம் சாட்டவில்லை என்று கூறி இருப்பது விந்தையான வேடிக்கையல்லவா?
நானா சொன்னேன் என்ற பாணியில் பேசிகொண்டிருக்கும் இவரை பாராளமன்றத்துக்கு அனுப்பிய லச்சக்கணக்கான மக்களை என்ன சொல்வது?
அரசியல் வர்த்தகத்தில் ஓட்டுகளை முதலீடு செய்த மக்கள் முட்டாள்கள் என்று சொல்லுவதை விட வேறென்ன சொல்வது???
ஒட்டு போடுவதும், டீ கடை பெஞ்சில் அங்கலாய்த்துக்கொள்வதும், நமக்கு பிடித்த கட்சியின் நாழிதலை படித்துவிட்டு நமக்குள் சண்டயிட்டுக்கொல்வதும், ஒரு சாதாரண குடிமகனாய் சொந்த வாழ்கையை தொடர்வதும், இவர்கள் கொள்ளையடிக்க கஷ்டப்பட்டு உழைத்து வரி செலுத்துவதும், வராத ஒரு குடம் தண்ணிக்காக ஒரு நாள் முழுவதும் போராட்டம் நடத்துவதும் தவிர நாம் வேறென்ன செய்ய போகிறோம் என் சகோதர சகோதரிகளே???

கேள்விகளை மட்டும் வைத்துக்கொண்டு என் குடும்பத்துக்காக உழைக்க இதோ ஒரு சாதாரண குடிமகனாய் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்... பதில் தெரிந்தால் சொல்லுங்கள்....
No comments:
Post a Comment