Tuesday, March 26, 2013

உன் குத்தமா??? என் குத்தம்மா???

எனக்கு இதை எழுத ஆரம்பிக்கும் பொழுதே தெரியும் இந்த பதிவு சில எதிர்ப்புகளை சந்திக்கலாம் என்று... எனக்கு தெரிந்த உண்மையை சொல்லுவதில் தவறில்லையே??? எல்லோருக்கும் இருப்பதுபோல் எனக்கும் தனி மனித கருத்து உண்டு. அவை தான் இங்கே பதிவு செய்யபட்டிருக்கிறது. அதை தவிர யாரையும், யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.

சமீக காலமாய் பரவலாக அதிகம் பேசப்படும் செய்தி - இலங்கை ராணுவம் செய்த போர் குற்றங்களும் , தனி ஈழம் என்ற கோஷமும் தான்...

முதலில் போர் குற்றங்கள் பற்றிய என் கருத்தை மீண்டும் பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன். நான் மீண்டும் என்று சொன்ன காரணம், என் கருத்து இன்றல்ல ஒரு வருடத்திற்கு முன்பே என் ஆங்கில பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது - http://vigramthinks.blogspot.in/2012/03/humanity-dead-or-alive.html

நான் பலமுறை சொன்னது போல் இந்த போர் குற்றம் மட்டும் இல்லை எல்லா போர் குற்றங்களுமே நிச்சயம் கண்டிக்க மட்டுமல்ல தண்டிக்க பட வேண்டியவை. இலங்கையில் நடைபெற்ற போர் குற்றத்திற்கு என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

தனி ஈழம் பற்றி நிச்சயம் நான் கருத்து சொன்னால் அது தவறாக தான் இருக்கும். ஏனெனில் தனி ஈழம் கேட்டு போராட்டம் ஆரம்பித்த காரணம் எனக்கு நிச்சயம் முழுவதுமாக தெரியாது.

ஆனால்.... இந்த போராட்டங்களை பார்க்கும் பொழுது சில கேள்விகள் எனக்குள் தோன்றியது (அவைகளில் சில அடிப்படை அறிவு இல்லாத கேள்வியாக கூட இருக்கலாம் ) பதில் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

தயவு செய்து "தமிழன்" என்ற இன வட்டத்துக்கு வெளியே வந்து யோசித்து பதில் சொல்லவும். உணர்ச்சி வசப்பட்டு சொல்லும் பதில் எமக்கு தேவை இல்லை :) இன வெறியர்களுக்கும் இங்கே இடம் இல்லை. மனிதர்கள் மட்டும் pls ...

 1.  தனி நாடு கேட்டு போராட்டம் நடத்தியது யார்? உண்மை காரணம் என்ன???
2. இந்திய நாட்டில் தமிழன் தனி நாடு கேட்பதையே அனுமதிக்காத நாம் எவ்வாறு அடுத்த நாட்டில் கேட்பதை நியாய படுத்துகிறோம்?
3. இலங்கை முதலில் தமிழர்களால் ஆளப்பட்டது என்பது தவறான செய்தி. இலங்கையின் வரலாற்றை படித்து பாருங்கள் இது விளங்கும். தமிழன் போர் நடத்தி இலங்கையை சில காலங்கள் ஆண்டானே தவிர, இலங்கையின் முப்பாட்டன் தமிழன் இல்லை.
4. இப்பொழுது இலங்கையில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் ஆங்கிலேயே ஆதிக்கத்தின் பொழுது தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய அடிமைகளாய் சென்றவர்களே.. (By the mid-19th century, Ceylon tea had become a staple of the British market bringing great wealth to a small number of white tea planters. The planters imported large numbers of Tamil workers as indentured labourers from south India to work the estates, who soon made up 10% of the island's population. These workers had to work in slave-like conditions living in line rooms, not very different from cattle sheds. Source : Wikipedia )
5. உண்மை இப்படி இருக்க, அதை திரித்து கூறி "தமிழன்" என்ற இன வெறியை விதைத்து இன்று தமிழ்நாட்டில் போராட்டத்தை தூண்டும் அரசியலுக்கு உண்மையில் பலியானது யார்????
6. சரி... தமிழுக்கும், தமிழர்க்கும் கலங்கும் கண்களை இத்தனை வருடங்கள் எங்கே வைத்திருந்தீர்??? இந்த போரும், போர் குற்றங்களும் நேற்று நடந்தவை இல்லையே??? பல வருடங்கள் நடந்துகொண்டுதானே இருக்கிறது... அப்பொழுது எங்கே போனீர்கள்????
7. இலங்கையில் இருந்து பல வருடங்களுக்கு முன் அகதிகளாய் தமிழகம் வந்த தமிழர்கள் இன்றும் அகதிகளாய் தானே இருகிறார்கள்... அவர்களுக்கு என்ன போராட்டம் செய்தீர்கள்?
8. தமிழனின் இன உணர்ச்சியை தூண்டி அதில் அரசியல் செய்யும் கேவலமான மனிதர்களின் தூண்டிலுக்கு சிக்கிய மீனாக என் சகோதரன் இருகிறானே என்று எண்ணி கவலை படுவதை தவிர வேறு என்ன நான் செய்ய???
 9. நம் நாட்டின் எல்லைக்குள் வேறு நாட்டவன் நுழைந்தால் நம் ராணுவம் என்ன செய்யுமோ அதை  தானே இலங்கை ராணுவமும் செய்தது?? அதிக மீன்களுக்கு ஆசை பட்டு கடல் எல்லையை மதிக்காதது யார் குற்றம்??? தமிழன் என்பதால் மட்டும் என் மக்கள் செய்வது அனைத்தும் நியாயம் ஆகிவிடுமா????
10. இலங்கையில் நடத்த போர் குற்றத்திற்காக போராட உனக்கு உரிமை இருப்பதாய் நீ கருதினால், உன் நாட்டின் ராணுவம் உன் நாட்டின் எல்லைக்குள் நடத்தும் போர் குற்றங்களை நீ கண்டிக்காதது ஏன்??? அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதாலா??? அப்படி என்றால் நீ முதலில் மனிதனே இல்லை பின் தமிழனை பற்றி பேச உனக்கென்ன அருகதை இருக்கிறது???
11. இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்படும் பெண்கள் உன் சகோதரிகள் இல்லையா??? கொல்ல பட்டவர்கள் உன் சகோதரர்கள் இல்லையா???

இலங்கை சென்று வந்த அணைத்து நாடு நிலையாளர்கள் சொல்லுவது ஒன்று தான் -

இலங்கையில் தமிழர்களின் புணர் வாழ்விற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பான்மை தமிழர்களும் நிம்மதி தெரிவித்து உள்ளார்கள். அவர்கள் பயபடுவதெல்லம் எங்கே தமிழ்நாட்டில் நடக்கும் போரட்டத்தால் அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படுமோ என்றுதான்.

நீங்கள் அடைய விரும்புவதும் அது தானே??

1. பன்னாட்டு சுதந்திர விசாரணை - விசாரணை நடக்கிறது என்று சீரமைப்பு பணிகளை இலங்கை நிறுத்தி விட்டால் நீங்களா போயி அவங்கள காப்பாத்துவிங்க??? இங்க போராட்டம் மட்டும் தான பண்ணுவிங்க???
2. தனி ஈழம் வேண்டும் - சரி... ஒரு பெயருக்கு நாளையே தனி ஈழம் தருகிறார்கள் என்று வைத்து கொள்வோம். அந்த தனி நாட்டிற்க்கு நீங்கள் என்ன திட்டம் வைத்திருகிறீர்கள்??? தனி நாடு என்பது என்ன சின்ன புள்ளைங்க வெளையாடுற பொம்மை விளையாட்டா???


இன்று இலங்கையில் தமிழர்களின் இந்த நிலைக்கு உங்கள் தனி ஈழ கொள்கையும், போராட்டமும் நிச்சயம் ஒரு காரணம். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை தனியாக கேட்டால் தமிழன் நானே அடிப்பேன். அப்படி தான அவங்களுக்கும் இருக்கும்??? இலங்கையில் தமிழனுக்கு தனி நாடு கேட்க நீ யாரு?? அப்படியே குடுத்தா நீ என்ன பண்ணுவ, பண்ண முடியும்???

அடுத்தவர்களின் அரசியல் லாபத்திற்காக பகடையாய் ஆவதை முதலில் உணருவாயா  தமிழா ???

பி.கு : இவை அனைத்தும் முழுவதுமாய் என் சொந்த கருத்துக்களே. யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. தவறு இருப்பதாய் தெரிந்தால் திருத்தி கொள்ள நான் தயார்.

No comments:

Post a Comment